தமிழ்நாடு வீட்டு பட்டியல் ஆய்வு

தமிழ்நாட்டின்  சமூகப் பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்வது தமிழ்நாட்டிலுள்ள  குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்த குழுப்பட்டியல் ஆய்வின் நோக்கமாகும்.  தனிநபர், குடும்பங்கள் ஆகியவற்றை முக்கிய ஆதாரமாகக் கொண்டு சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில்  ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியை கண்டறியும் வகையில் இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்களைத் திட்டமிடுபவர்களும் மற்றும் பொது மக்களும் உரிய நேரத்தில் தேவையான புள்ளி விவரங்கள் இந்த ஆய்வின் மூலம் கிடைக்கப்பெறும். 


 இந்த ஆய்வானது  முன் அடிப்படை ஆய்வு, அடிப்படை ஆய்வு மற்றும்  இறுதி நிலை என மூன்று கட்டங்களாக மூன்று ஆண்டுகள் தொடர் ஆய்வாக நடத்தப்படுகின்றது. இந்த ஆய்வு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, சென்னை மேம்பாட்டு ஆய்வு நிறுவனம், அமெரிக்க மிச்சிகன் பல்கலைக் கழக ஆராய்ச்சி ஆய்வு மையம்  ஆகியோருடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.  இவ்வாய்வின் முக்கிய அம்சமானது கையடக்க கணினி உதவியுடன் தனிப்பட்ட நேர்காணலில் இலக்க முறையில் விவரங்களை சேகரிப்பதாகும்.