புள்ளி விவரங்கள் தரவு பகுப்பாய்வு மையம்

 

பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை உலக சூழலுக்கேற்ப புள்ளி விவரங்களை வழங்குதோடு மட்டுமல்லாமல் அத்தரவுகளை சிறப்பாக ஆய்வு செய்யும் ஒரு பிரிவாகவும் செயல்படுகிறது. பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாட்டின் போது உருவாகும் அளவற்ற தரவுகளை ஆராய்ந்து, அவற்றின் மூலம் செயல்படுத்தக்கூடிய பயனுள்ள அறிக்கைகளாக அளிப்பது  அரிதாகிறது. எனவே, 2015-16 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கை உரையில் பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை,  தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன்  இணைந்து `புள்ளி விவரங்கள் பகுப்பாய்வு மையம்' உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இம்மையம்  தரவு அடிப்படையிலான உள்ளீடுகளை, உயர்மட்டக்  கொள்கைகளை உருவாக்கும் அமைப்புகளுக்கு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பை அளிக்க உதவுகின்றது.  இந்தியாவில் இதுபோன்ற மையத்தினை நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.


நவீன தகவல் தொழில்நுட்பங்களை மற்றும் பயன்பாட்டு மென்பொருளை பயன்படுத்தி தொடர்புடைய தரவுகளை வழங்கி விரைவில் முடிவெடுக்க இம்மையம் உதவுகிறது. இம்மையம்  மாநில அளவிலான தகவல் சேகரிப்பு இணைய முகப்பு ஒன்றை  உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு துறைகளின் விவரங்களை விரைவாக மற்றும் துல்லியமாகத் தொகுத்து தேவையின் அடிப்படையில் அரசுக்கும் பிற  துறைகளுக்கும் வழங்குவது இம்மையத்தின் சிறப்பம்சமாகும்.