கட்டிடப் புள்ளி இயல்

வீட்டு வசதி  மற்றும் கட்டிடப் புள்ளி இயல்:
தேசிய அளவில் வீட்டு வசதி கொள்கை மற்றும் வீட்டு வசதி திட்ட ஆவணங்களை ஏற்படுத்துவதற்காக பொது மற்றும் தனியார் துறைகளின் கட்டிடம் சம்பந்தமான செயல்பாடுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. 


இத்திட்டத்தின் கீழ், கட்டுமானத்தின் தன்மை மற்றும் வகை, அஸ்திவாரம், தரைபரப்பு பகுதி, வசிக்கும் அலகுகள், குடியிருப்பு மற்றும் குடியிருப்பல்லாத அலகுகள் எண்ணிக்கை, மதிப்பீடு செலவு போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.2019-2020-ல் பொதுத்துறை திட்டப் பட்டியல் மற்றும் படிவம்-1 – பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து விவரங்கள், தனியார் துறை படிவம்-2 – 151 நகரங்களிலிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

S.NoReport for Public and Private Sector View/Download

12019-2020View

22018-2019View

32017-2018

View

42016-2017View

52015-2016View

62014-2015View

வீடு  கட்டத் தொடங்குதலுக்கான குறியீடு:
 மத்திய அரசின் வீட்டு வசதி மற்றம் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்ட அமைச்சகத்தின் கீழ் உள்ள, தேசிய கட்டட அமைப்பு மூலம் வீடு கட்டத் தொடங்குதலுக்கான குறியீடு எனும் திட்டம் 2014–15ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இக்குறியீடு பல்வேறுபட்ட துறைகளின் வளர்ச்சியைக் கண்டறிய முக்கிய காரணியாக உள்ளது.  மேலும், வீடு கட்ட தொடங்கும் குறியீட்டு கணக்கீடானது வீட்டு வசதி திட்டத்தில் நிகழும் மாற்றங்களையும் மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சியைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இத்திட்டத்திற்காக தமிழகத்தின் தேர்வு செய்யப்பட்ட 17 மையங்களில் உள்ளாட்சி நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்ற புள்ளி விவரங்கள் தேசிய கட்டடவியல் கழக இணைவு வாசல் (NBO- Portal) மூலம் இத்துறையினால் பதிவு செய்யப்படுகிறது. 


கட்டிடக் குறியீட்டெண்:     
 கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பணியாளர்களின் கூலி விவரங்கள் காலாண்டிற்கு ஒருமுறை 16 மாவட்ட மையங்களில் இருந்து (சென்னை,காஞ்சிபுரம்,கடலுார், வேலுார், சேலம், தர்மபுரி, கோயம்புத்துார், ஈரோடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், பாளையங்கோட்டை, நாகர்கோவில், மற்றும் உதகமண்டலம்)  சேகரிக்கப்படுகின்றன. அடிப்படை ஆண்டு 1999-2000 = 100 அடிப்படையில்  கட்டிடக் குறியீட்டெண் கணிக்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.


 கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பணியாளர்களின் கூலி விவரங்கள் காலாண்டிற்கு ஒருமுறை 16 மாவட்ட மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.


31.03.2019 – உடன் முடிவடைந்த காலாண்டிற்கு 16 மையங்களுக்கான கட்டிட செலவு குறியீட்டெண் தொகுப்புப்பணி நடைபெற்று வருகிறது.        

S.No Report Published Year View/Download 1 2018-19 View 2 2017-18 View 3 2016-17 View 4 2015-16 View 5 2014-15 View 6 2013-14 View 7 2012-13 View 8 2011-12 View