வயது முதிர்ந்தோரின் சமூக பொருளாதார நிலை, உடல்ரீதியாக மற்றும் பொருளாதாரரீதியாக மற்றவர்களை சார்ந்திருத்தல், அறிவாற்றல் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை உட்கொண்ட சுகாதார நிலை ஆகியவற்றை அறிதல் மற்றும் சுகாதார அமைப்பு மற்றும் சமுக பாதுகாப்பு மற்றும் அணுகுமுறை ஆகியவற்றை அறிந்து கொள்வது இந்த குழுப் பட்டியல் ஆய்வின் நோக்கமாகும். வயது முதிர்ந்தோரின் சமூக பொருளாதார நிலையினைக் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும். மேலும், வயது முதிர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த தேவைப்படும் இலக்குகளை அடைய ஒரு தனித்துவமான தளத்தை இந்த ஆய்வு வழங்கும்.
இந்த ஆய்வு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி ஆய்வகம் தெற்கு ஆசியா, (ஜே-பால் தெற்கு ஆசியா) நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து மூன்றாண்டுகள் தொடர் ஆய்வாக நடத்தப்படும். இந்நிறுவனமானது தொழில்நுட்ப ஆலோசகராகவும், தரக்கட்டுப்பாட்டாளராகவும் செயல்படும். இவ்வாய்வில் சுகாதார அளவீடுகள் மற்றும் உயிர் குறிப்பாண்கள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
மனித வளர்ச்சி குறியீடு மற்றும் சார்ந்திருத்தல் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சென்னை (பெருநகர பகுதி), திருவண்ணாமலை, தருமபுரி, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு பணி ஜீலை-2018 ல் முடிவடைந்துள்ளது. சுமார் 92,000 குடும்பங்கள் இந்த ஐந்து மாவட்டங்களில் களப்பணி ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அடிப்படை ஆய்வு பணி ஜீன் 2019ல் முடிவுற்றுள்ளது. 4,739 குடும்பங்களில் 6,294 வயது முதிர்ந்தவர்கள் உள்ளனர் என அடிப்படை ஆய்வில் உள்ள வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பில் உள்ளதாக பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை ஆய்வின் மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரதுறை மூலம் 4,496 வயது முதிர்ந்தவர்களிடமிருந்து சுகாதார அளவீடுகள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. திட்டப் பகுப்பாய்வு மேற்கொள்ளும் பணி முடிவுபெற்றுள்ளது. அடிப்படை ஆய்வின் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது
ஜே-பால் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை பரிசீலனையில் உள்ளது.