வேளாண்மை பிரிவு

மாநிலத்தின் பொருளாதரத்தில் வேளாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GDP) விவசாயத்தின் பங்கு குறைந்து வரும் நிலையிலும் வேளாண்மை பணிகளின் வாயிலாக 40 சதவீதத்திற்கும் மேலான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் பணிபுரியும் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைத் தரத்தினை நிர்ணயிக்கும் விதமாக வேளாண்மை புள்ளிஇயலின் பங்கு மாநில பொருளாதாரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, மாநில வேளாண்மை புள்ளிஇயல் ஆணைக்குழுவாக (State Agricultural Statistical Authority) செயல்பட்டு வருகிறது. இத்துறையில் வேளாண்மை புள்ளி விவரம், பயிர் பரப்பு மற்றும் உற்பத்தி, நிலப்பயன்பாடு, நீர்ப்பாசனம், நில உடைமை, பயிர்க் காப்பீடு, விவசாயக்கூலி, விவசாயிகளின் விளைச்சலின் விற்பனை மிகுதி போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியது. இவ்விவரங்கள் விவசாயம் சார்ந்த திட்டங்களின் கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்குப் பயன்படுகிறது.