தமிழ்நாடு கோவிட் துடிப்பாய்வு

உலகலாவிய தொற்று நோய் தாக்கத்தையும் பொது முடக்க நடவடிக்கைகளை கணக்கிடவும் தமிழ்நாட்டில் மாதிரி வீடுகளை தேர்ந்தெடுத்து இந்த சிக்கலான தருணத்தில் தமிழ்நாடு அரசிர்க்கு உதவும் வகையில் தமிழ்நாடு கோவிட் துடிப்பாய்வு (TNCPS), குறிப்பிட்ட சீரான கால இடைவெளிகளில் ஒரு ஆண்டுக்கு மேலாக தோராயமாக பிரதி மூன்று மற்றும் நான்கு மாத இடைவெளிகளில் ஒரு விரைவான தொலைப்பேசி வழி கணக்கெடுப்பாக நடத்தப்பட்டது. இந்த முக்கியமான மற்றும் மகத்துவம் வாய்ந்த திறனாய்வு பணியில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையுடன் இணைந்து  மாநிலம் தழுவிய, விரைவாக பதிலளிக்கும் தொலைப்பேசி கோவிட் 19 துடிப்பாய்வுப் பணியினை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் துவங்கியது.

 
மேலும், தமிழ்நாடு கோவிட் துடிப்பாய்வு அலை-1 கணக்கெடுப்பில் கிராமப்புற மற்றும் நகர்பறத்திலிருந்து முறையே 13749 மாதிரி வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் 10,014 குடும்பங்கள் வெற்றிகரமாக கணக்கெடுக்கப்பட்டன.  இக்கணக்கெடுப்பு ஜீன் 2020-ல் முடிக்கப்பட்டது.  இக்கணக்கெடுப்பு பிப்ரவரி-2020 முதல் மே-2020 வரையிலான இடைவெளியில் தரவுகள் சேகரிக்கப்பட்டது.  இத்தரவுகள் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம், வருமானம், இடம்பெயர்தல், கோவிட் நிவாரண திட்டங்களின் தாக்கம், உணவு, பாதுகாப்பு முறை, மனநல சவால்கள் மற்றும் கோவிட்-19 காலத்தில் பதியப்பட்ட வழங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மேலும், இத்தரவுகள் உயர்மட்ட குழுவின் தீர்மானங்களுக்கு பெரிதும் பங்களிப்பாக இருந்தது.
தமிழ்நாடு கோவிட் துடிப்பாய்வு 2-வது அலை கணக்கெடுப்பு அக்டோபர் 2020-ல் முடிக்கப்பட்டது. இதில் தரவுகள் ஜீன்-2020 முதல் செப்டம்பர்-2020 கால இடைவெளியில் சேகரிக்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவது கால இடைவெளிகளில் ஏற்பட்ட மாற்றங்களை அளவீடு செய்யும் பொருட்டு கோவிட் அலை-1 கணக்கெடுப்பு ஆய்வில் சேகரிக்கப்பட்ட மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து தரவுகளும் கோவிட் அலை 2-வது கணக்கெடுப்பு ஆய்விலும் சேகரிக்கப்பட்டது. இத்தரவுகளில் கூடுதலாக நிகழ்நிலை கல்வி முறையில் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் சவால்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டது.  இந்த காலக்கட்டத்தில் தான் பொருளாதார திறப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் உள்நோக்கு பார்வையினை, அறியவும் கொள்கை வகுத்தலுக்கும் பயன்படும் வகையிலும்  பொதுமக்களின் சிக்கல்கள் சமாளிக்கும் திறன் தொடர்பான வினா பட்டியல் 2-வது அலை கணக்கெடுப்பு ஆய்வில் சேர்க்கப்பட்டது.
    உலகலாவிய சர்வேதேச பரவல் நோயினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் இழப்புகளை முந்தைய நிலைக்கு மீட்டுக் கொண்டு வருவதற்கு தமிழக அரசுக்கு உதவும் வகையில் தரவுகளை சேகரிப்பதே  தமிழ்நாடு கோவிட் துடிப்பாய்வுப் பணியின் முதன்மை நோக்கம் ஆகும். பொதுமக்களின் மாற்று இடம் பெயர்வு, வேலை இழப்பு, வீட்டு வருமான இழப்பு, தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், கோவிட் 19 ஆதாரவு திட்டங்கள், வலைத்தளவழி நிகழ்நிலை கல்வி, இடர்பாடுகள் சந்திக்கும் திறன் ஆகிய அதி முக்கிய தரவுகளை சேகரிக்க இந்த ஆய்வுப் பணிக்கு அளவீட்டு முறைகளுடன் கூடிய வினாப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. உலகலாவிய நோய் பரவல் காலங்களில் கணினி உதவியுடன் கூடிய தொலைபேசி பேட்டிகள் வாயிலாக பதிலாளிகளிடம் வினப்பட்டியலில் உள்ள தரவுகள் சேகரிக்கப்பட்டது.