தொழில்  உற்பத்தி குறியீட்டெண்


தொழில் உற்பத்தி குறியீட்டெண், மாநில அளவில் உள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி விவரங்கள்  மற்றும்  பொருளாதார நிலைமையினை மதிப்பிட உதவுகிறது. ஒவ்வொரு மாதமும் கனிமம் (8 வகைகள்), தொழிற்சாலை (144 வகைகள்), மின்சாரம் (1 வகை) ஆகிய துறைகளிலிருந்து அடிப்படை ஆண்டு       2011-12ற்கு உற்பத்தி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.


மாதாந்திர அறிக்கை, மூன்று துறைகளிலிருந்து பெறப்படுகின்ற உற்பத்தி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கனிம உற்பத்தி விவரங்கள், கனிமம் மற்றும்  சுரங்கத் துறை, அலுவலகத்திலிருந்தும்,  மின்சார உற்பத்தி, மத்திய மின் வாரியம், புது டில்லியிலிருந்தும், தொழிற்துறை உற்பத்தி விவரங்கள் 1244 தொழிற்சாலைகளிடமிருந்து நேரடியாக உரிய படிவங்களில் பெறப்பட்டு 253 வகைகளுக்கும் விவரங்கள் சேகரிக்கப்படுகிறன்றன. இந்த உற்பத்தி விவரங்களை அடிப்படையாக கொண்டு, துறை வாரியான மற்றும் பயன்பாடு வாரியான குறியீட்டெண்கள் ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகின்றன.


 ஜீலை 2019 வரையிலான திருத்திய அறிக்கை மற்றும் ஆகஸ்டு, செப்டம்பர் 2019 வரையிலான தற்காலிக அறிக்கை (அடிப்படை ஆண்டு 2011-12) வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்டு, செப்டம்பர் 2019 மாதத்திற்கான திருத்திய அறிக்கை மற்றும் அக்டோபர், நவம்பர் 2019  மாதத்திற்கான தற்காலிக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

S.No Report Published Year Download
1 2020-2021 View
2 2019-2020 View
3 2018-2019 View
4. 2017-2018 View
5. IIP Base Year Shifting View