இந்திய புள்ளிஇயல் அமைப்பினை வலுப்படுத்தும் திட்டம் (ISSP) புள்ளி இயல் வலுப்படுத்தும் ஆதரவுத் திட்டம் (SSS) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் திட்டமானது பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் செயல்பாடுகளை மாநில அளவில் ஒருங்கிணைக்க மனிதவள மேம்பாட்டிற்கும் மாநில பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தமிழக அரசு மத்திய அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
இத்திருத்திய புரிந்துணர்வு ஒப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகள் மேற்படி நிதியை பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது. துறையில் செயல்படுத்தப்படும் தரவுகள் சேகரிக்கும் பொதுவான மென்பொருள் ஆய்வு பயன்பாட்டு தயாரித்தல், தகவல் பரிமாற்றத்திற்காக 645 சிம் கார்டுகள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் வாங்குதல், ஆற்காடு மற்றும் இராசிபுரம் வட்டாரப் புள்ளி இயல் ஆய்வாளர்களின் அலுவலக கட்டிடங்கள் மற்றும் மண்டல மற்றும் மாவட்ட அலுவலகங்களில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளுதல், பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் கணிணி வன்பொருள் மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.