தேசிய மாதிரி ஆய்வு என்பது இந்தியாவின் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, தொழில் நுட்ப வழிகாட்டுதலுடன் தொடர்ச்சியான சுற்றுகளில் நடத்தப்படும் மாநில அளவிலான, பெரிய அளவிலான பல தலைப்பிலான ஆய்வு ஆகும். இந்த ஆய்வு, வெவ்வேறு துறைகளைப் பற்றிய கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட மாதிரி தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடுகளை அளிக்கிறது.
75வது சுற்று தேசிய மாதிரி ஆய்வு (ஜுலை 2017 முதல் ஜுன் 2018) “வீட்டு நுகர்வோர் செலவினம், கல்வி பற்றிய உடல்நலம் மற்றும் வீட்டு சமூக நுகர்விற்கான வீட்டு வசதி சமூக நுகர்வு” பற்றிய கணக்கெடுப்புக்கு ஒதுக்கப்பட்டது
76வது சுற்று தேசிய மாதிரி ஆய்வு (ஜுலை 2018 முதல் டிசம்பர் 2018 வரை), “குடிநீர், சுகாதாரம் மற்றும் வீட்டு வசதி நிலை மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறித்த ஆய்வு” ஆகியவற்றின் மீதான கணக்கெடுப்புக்கு ஒதுக்கப்பட்டது.
தேசிய மாதிரி ஆய்வு 77வது சுற்றில் (ஜனவரி 2019-டிசம்பர் 2019) “நிலம் மற்றும் கால்நடை இருப்பு, விவசாயக் குடியிருப்புகளின் தற்போதைய நிலை மற்றும் கடன் மற்றும் முதலீடு” ஆகியவற்றைப் பற்றிய கணக்கெடுப்புக்கான களப்பணி முடிவடைந்துள்ளது.
தற்பொழுது தேசிய மாதிரி ஆய்வு 78வது சுற்றில் (ஜனவரி 2020-டிசம்பர் 2020) “உள்நாட்டு சுற்றுலா மற்றும் பல்நோக்கு குறியீட்டு கணக்கெடுப்பு” ஆகியவற்றைப் பற்றிய கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.