நுகர்வோர் விலைக் குறியீட்டெண்

அ)தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண்

 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, குன்னூர், கோயமுத்தூர் மற்றும் சேலம் ஆகிய ஆறு மத்திய மையங்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டெண்கள் சிம்லாவில் உள்ள மத்திய தொழிலாளர் செயலகத்தால் 2001 = 100 ஐ அடிப்படை ஆண்டாக கொண்டு கணித்து வெளியிடப்படுகிறது. அதற்கான விலை விவரங்கள் அந்தந்த மையங்களிலிருந்து சேகரித்து நேரடியாக சிம்லாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடலூர், நாகர்கோயில், வேலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாநில மையங்களுக்கு 2011 = 100 ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு நுகர்வோர் விலைக் குறியீட்டெண்கள் மாதந்தோறும் கணித்து  வெளியிடப்படுகிறது. நுகர்வோர் விலை குறியீட்டெண்களைக் கொண்டு அகவிலைப்படி, தினக்கூலி, மற்றும் குறைந்தபட்ச கூலி ஆகியவை கணக்கிடப்படுகின்றன.
 

  CPI for Industrial Workers  
S.No Year Download
1 Up to 2007 View

ஆ)நுகர்வோர் விலை குறியீட்டெண்கள் (கிராமப்புறம், நகர்ப்புறம், இணைந்தது)

  மாவட்ட அளவிலான கிராமப்புற மற்றும் நகர்ப்புற நுகர்வோர் விலைக் குறியீட்டெண்கள் திட்டங்களை பரவலாக்குவதற்கும், மாவட்ட அளவிலான விலை நிலவரப் போக்கினை அறிந்து கொள்வதற்கும், குறிப்பிட்ட மண்டலம்    அல்லது மாவட்டத்திற்குரிய கொள்கைகளை வகுப்பதற்கான இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் பயன்படுகிறது.

 மத்திய புள்ளி இயல் அலுவலகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2019-2020-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு மாவட்ட அளவிலான நுகர்வோர் விலைக் குறியீட்டெண்கள் கணிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. நுகர்வோர் விலைக் குறிட்டெண்கள் கணிப்பதற்கு தமிழ்நாட்டின்   மாவட்டங்களில் உள்ள 153 கிராமப்புற மையங்கள் மற்றும் 145 நகர்ப்புற மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பொருட்களின் தொகுப்பு இறுதி செய்யப்பட்டு அடிப்படை ஆண்டு விலை விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 

  CPI for Urban  
S.No Year Download
1 2008 View
2 Up to 2007 View
  CPI for Rural  
S.No Year Download
1 2008 View
2 Up to 2007 View

 

.