மத்திய புள்ளியியல் அலுவலகம் வழிகாட்டுதலின் படி மாநில பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கான மொத்த நிலையான மூலதன ஆக்கம் கணக்கிடப்படுகின்றன. இவற்றின் மூலம் ஒவ்வொரு பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இம்மதிப்பீடுகள் அரசிற்கு சரியான கொள்கை முடிவு எடுப்பதற்கும் நாட்டின் பொருளாதார திட்டமிடுதலுக்கும் பயன்படுகின்றன.
2011-12 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு, 2017-18 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் பொதுத்துறைகளுக்கான மொத்த மூலதன ஆக்கம் மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.