மாநிலக் கணக்கு மற்றும் உள்ளாட்சிக் கணக்குகள்

.
மாநில கணக்கு பிரிவு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாநில நிதிநிலை அறிக்கை ஆவணங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய வரவு-செலவு கணக்குகள், பொருளாதார மற்றும் செயல்நோக்கம் அடிப்படையில் (Economic cum Purpose Classification) பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. மேலும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து  உள்ளாட்சி கணக்குகளுக்கும்  பொருளாதார பகுப்பாய்வும் செய்யப்படுகிறது.  நிதிநிலை அறிக்கை ஆவணங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகள் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு, மூலதன ஆக்கம் கணக்கிடுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.


பொருளாதார மற்றும் செயல்நோக்கு அடிப்படையில் 2017-18 (கணக்குகள்) 2018-19 (திருத்த மதிப்பீடு), 2019-20 (திட்ட மதிப்பீடு) ஆகிய ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மாநில நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.    மாநில உள்ளாட்சி நிறுவனங்களான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய வரவு-செலவு கணக்குகள் 2018-19 ஆம் ஆண்டிற்கு பொருளாதார மற்றும் செயல்நோக்கம் அடிப்படையில்  பகுப்பாய்வு பணி  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.