ஜீ -அறிக்கை

ஜீ-அறிக்கை ’ என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜமாபந்திக்குப் பிறகு இறுதி செய்யப்படும் ஒரு கிராமத்தின் பயிர் சாகுபடி விவரங்களின் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்கு. கிராமத்தின் 'ஜீ-அறிக்கை' கிராமத்தின் ஒன்பது வகையான நிலப்பாகுபாடு, அனைத்து உணவு மற்றும் உணவு சாராத பயிர்கள் பயிரிடப்பட்ட பருவம் வாரியான அறிக்கை ஆகும் .  நீர்ப்பாசன விவரங்கள், நீர்ப்பாசன ஆதாரங்கள், விவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் நீர்ப்பாசன கிணறுகளின் எண்ணிக்கை, கிணறுகளின்சொந்த மற்றும் தொழில்துறை பயன்பாடுகள் ஆகியவை அடங்கும். நீர்ப்பாசன முறை, ஏரி, குளம் போன்ற நீர்வளங்களின் நீர்ப்பாசனப் பகுதி. ஒரு வருடத்தில் இறுதி செய்யப்பட்ட பயிர் சாகுபடி விவரங்கள் கிராம வருவாய் பதிவுகளான I, IA மற்றும் II (அடங்கல்) ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படுகின்றன. கிராம ‘ஜீ-அறிக்கை கிராம நிருவாக அலுவலர்களிடமிருந்து  சேகரிக்கப்பட்டு வட்டாரம் , மாவட்ட மற்றும் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜீ-அறிக்கையில்  கிடைக்கும் தரவுகளுடன் பருவம்  மற்றும் பயிர் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.