மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகளை அளவிடுவதற்கு மாநில வருவாய் கணக்கீடு மிகவும் இன்றியமையாததாகும். மாநில உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார பெருமொத்த காரணிகள் மாநிலத்தின் வளர்ச்சியின் நிலையை கணிக்க அவசியமான ஒன்றாக விளங்குகின்றன. மேலும், அரசுக்கு பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் ஏற்படும் மாற்றங்களை கணிக்கவும் அரசு நிதி நிலை தேவைகளை கணிக்கவும் இவை பயன்படுகின்றன.