மாநிலம் முழுவதும் பரவியுள்ள 96 சந்தை நுண்ணறிவு மையங்களில் இருந்து முக்கிய வேளாண் மற்றும் வேளாண்மை அல்லாத பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் சேகரிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் வாராந்திர / மாதாந்திர அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இந்த விலை விவரங்கள் முக்கியமான அரசாங்கக் கொள்கைகளை வகுப்பதில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் விலைக் குறியீடுகளின் தொகுப்பில் ஒரு அடிப்படையாக செயல்படுகிறது.