பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை இதன் தற்போதைய நிலையில் இயக்குநரை நிருவாகதலைவராக கொண்டு 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.முன்னதாக, இது 1933ஆம் ஆண்டில் வருவாய் வாரியத்தின் அலுவலகத்தில் ஒரு தகுதிவாய்ந்த புள்ளிவிவர நிபுணரால் நிர்வகிக்கப்பட்ட ஒரு சிறிய புள்ளிவிவரப் பிரிவில் இருந்தது. பின்னர் இந்த பிரிவு தொழில் மற்றும் வர்த்தக இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
ஆனால் மீண்டும் வருவாய் வாரியத்திற்கு மாற்றப்பட்டது.பின்னர்,புள்ளிவிவர செயல்பாடு மாநிலத்தின் பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது, எனவே பொதுத்துறையில் அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது
தமிழ்நாட்டின் மாநில புள்ளிவிவர பணிகளின் தலைமையகமாக இருக்கும் புள்ளிஇயல் துறை, வேளாண்மைத் துறை,வன மற்றும் மீன்வளத் துறை மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை போன்ற பல்வேறு துறைகளின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது. ஜூலை 1988 முதல், இது திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, இது தற்போது திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை என அழைக்கப்படுகிறது. 08.02.1996 முதல் புள்ளிஇயல் துறை ,"பொருள்இயல் மற்றும் புள்ளியியல் துறை" என்ற பெயருடன் நடைமுறைக்கு வந்தது.