இந்த ஆய்வு, பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, ”அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை குறித்த செயல் ஆராய்ச்சி ஆய்வகம் “தெற்கு ஆசியா”, (J-PAL, South Asia) நிறுவனம் மற்றும் பொது சுகாதாரம் துறை, ஆகியோருடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வுக்கான சுகாதார அளவீடுகள் சேகரிக்கும் பணி பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறையின் முலமாகவும், சமூக பொருளாதார ஆய்வு கைபேசி செயலியும் Survey CTO என்கிற மென்பொருள் மூலம் இந்தத் துறையால் மேற்கொள்ளப்பபட்டுள்ளது.
வயது முதிர்ந்தோரின் சமூக பொருளாதார நிலை அவர்களுடைய மனநிலை, உடல்ரீதியாக, பொருளாதாரரீதியாக மற்றவர்களை சார்ந்திருத்தல், வாழ்வு சூழ்நிலை மற்றும் சுகாதார நிலை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வது இந்த ஆய்வின் நோக்கமாகும். வயது முதிர்ந்தோரின் சமூக-பொருளாதார நிலையினைக் குறித்து தரவு தளம் (னுயவய க்ஷயளந) தயாரிக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த, தேவைப்படும் மிக முக்கிய நுணுக்கமான தீர்வுகள் அடைய இந்த ஆய்வின் முடிவுகள் தனித்துவத்துடன் உதவும்.
மனித வளர்ச்சிக் குறியீடு மற்றும் சார்ந்திருத்தல் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சென்னை (பெருநகர பகுதி), திருவண்ணாமலை, தருமபுரி, திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாய்வின் முதற்கட்டமாகிய வீடுகளைப் பட்டியலிடும் பணி சுமார் 92,000 குடும்பங்களில் ஆய்வு நடைபெற்றது. வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் அடிப்படையில் 5000 குடும்பங்களிலிருந்து சுமார் 7000 வயது முதிர்ந்தோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனவரி 2019 முதல் ஆய்வு நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. மாற்று வீடுகள் கணக்கெடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.