தமிழ்நாடு வீட்டு பட்டியல் ஆய்வு

 இந்த ஆய்வானது தொடக்க நிலை, இறுதி நிலை என இரு கட்டங்களாக மூன்று ஆண்டுகள் தொடர் ஆய்வாக நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, சென்னை மேம்பாட்டு ஆய்வு நிறுவனம் (Madras Institute of Development Studies), அமெரிக்க மிச்சிகன் பல்கலைக் கழக ஆராய்ச்சி ஆய்வு மையம் (Survey Research Center of University Michigan, USA) ஆகியோருடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் குடும்பங்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்வது இந்த ஆய்வின் நோக்கமாகும்.  தனிநபர், குடும்பங்கள் ஆகியவற்றை முக்கிய ஆதாரமாகக் கொண்டு சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியை, கண்டறியும் வகையில் இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்களைத் திட்டமிடுபவர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் உரிய நேரத்தில் தேவையான புள்ளி விவரங்கள் இந்த ஆய்வின் மூலம் கிடைக்கப்பெறும்.  இது குடும்பங்களின் மட்டத்தில் நடத்தப்படும் முதல் பெரிய அளவிலான குழு ஆய்வு ஆகும்.


இவ்வாய்வின் முக்கிய அம்சமானது கையடக்க கணினி உதவியுடன் தனிப்பட்ட நேர்காணலில் கணினிமுறையில் விவரங்களை சேகரிப்பதாகும் (Computer Assisted Personal Interview – Digital Mode).